Wednesday, May 21, 2014

Shiva - ருத்ர தாண்டவம்

காற்றிலே குழலாட கண்ணிலே கனலாட
கையிலாயன் ஆடும் நடனம்
காற்றுடன்பேய்பூதம் கருப்புபி சாசமும்
கண்டுகுலை நடுங்கும் நடனம்
மாற்றியே வைத்ததலை மத்தள வயிறனும்
மயிலேறும் ஆறு முகனும்
மறுபாதி ஆனஉமை அன்னையுமே கண்டு
மருள்கின்ற ருத்ர நடனம்
ஏற்றமிகு உமைபாகன் ஒருகாலைத் தூக்கி
ஓடியே சாடும் நடனம்
ஒதமிகு கடல்சினக்கும் ஊழிக் காலமதில்
அவனாடும் இறுதி நடனம்
பாட்டிலே அதைவைக்க பதறுதே என்நெஞ்சு
பாடவொண் ணாத நடனம்
பாட்டினையும் நீ யாத்து பாலனையும் நீ காத்து

பரமனே அருள் புரியவா 

No comments:

Post a Comment