Wednesday, May 21, 2014

Rama - இராமன் என்றால்

பல்லவி

இராமன் என்றால் எனக்கு மிகப் பிரியமே - அந்த
அண்ணலின் பெயர் ஒன்றே அநுகூலமே

அனுபல்லவி

தாமரைப் பாதங்கள் சிரம் தரித்தால் - இந்தச்
சென்மமும் சாபல்யம் அடைந்திடுமே

சரணம் 1

மண்டிய இருளவனும் அகற்றி விட்டான் - என்
மனதினில் தருமத்தை புகட்டி விட்டான்
கண்டதெலாம் தானாய் காட்சி தந்தான் - அவன்
கமலப் பதங்களையே போற்றி நின்றேன் 

(இராமன் என்றால்)

சரணம் 2

எண்ணங்களை அவனும் திருத்தி வைத்தான் - என்
இதயத்தில் தன்னையுமே இருத்தி வைத்தான்
அண்டவிடாமல் துயர் தள்ளி வைத்தான் - அவன்
இருவடிக்கே உயிரை எழுதி வைத்தேன்


(இராமன் என்றால்)

No comments:

Post a Comment