Wednesday, May 21, 2014

Parvati - அன்னை யென்றால்

பல்லவி

அன்னை யென்றால் அது கற்பகமே அவள்
அன்பினில் அகிலமே உட்படுமே

அனுபல்லவி

முன்னை வினைகளையே தீர்த்துவிடும் – அவள்
மரகத மாணிக்க பொற்பதமே - அம்மா

சரணம் 1

அன்பைப் பெருக்கியெனை ஆட்கொண்டவள் – அவள்
அருளின் எல்லையெனப் பேர்கொண்டவள்
என்புருகி இதயம் இளகியே நான் – அவள்
பொன்பதம் அடைந்திட ஆசைகொண்டேன் - அம்மா

சரணம் 2

வேதாந்த விளக்கே நான் மறைப்பொருளே – நல்
வாக்காகி மனமானக் கருப்பொருளே
ஓமென்னும் பிரணவத்தின் உட்பொருளே – என்னைப்
பாராமல் இருப்பதுமேன் கற்பகமே  - அம்மா

சரணம் 3

என்னது யானென்னும் அகந்தையறும் – நாள்
என்றுவரும் என்று நானறியேன்
கன்றுக்குச் சேதாபோல் கனிந்திறங்கி – என்னை

கருணையுடன் காத்தருளு கற்பகமே - அம்மா

No comments:

Post a Comment