Tuesday, May 13, 2014

Vishnu - அரவிந்தன் விழிமலர்கள்

அரவிந்தன் விழிமலர்கள் இன்னுமேன் மலரவில்லை
பொழுது புலரும் நேரமாச்சு - அந்தத்
திருமகளும் அவனையேன் தட்டி எழுப்பவில்லை
கதிரவனும் வந்தே யாச்சு

கண்ணாலே கண்டாலே  கடுந்துயரும் கரையுமெனக்
கருதியொரு அடியவர் கூட்டம் - அவரை
எண்ணாமல் இப்படியே அவனுமிங்கு உறங்கினால்
எப்படித் தீருமவர் வாட்டம்


விண்ணவரே அருள் புரிவீர் அவன்மீது மலர் சொரிவீர்
விழித்தெழச் செய்வீர்களே

(அரவிந்தன் விழிமலர்கள் )

தாயிலை தந்தையிலை இருந்தால் அவரிடம்
துயரங்கள் சொல்லி இருப்பேன் - இங்கு
ஏதுமொரு உறவு இல்லாமல் மனங்கலங்கி
உன்னிடம் சொல்ல வந்தேன்

மாயவனே தூயவனே மனங்கனிந்து விழித்தெழுந்து
பாலகனைக் காத்திடு வாயே

(அரவிந்தன் விழிமலர்கள் )

No comments:

Post a Comment