Wednesday, May 21, 2014

Vishnu - நீயுறையும் திருவரங்கம்


நீயுறையும் திருவரங்கம்
   நினைத்தாலே வினையாவும்
போய்விடுமே கதிரொளியில்
   பனிகரைந்தி டுவதுபோல்
நோய்தீரும் நலம்சேரும்
   நினைத்ததெல்லாம் கூடிவரும்
ஆதிமறை தேடுகின்ற
   அரங்கத்துப் பெருமாளே


கண்ணுள்ளே நின்றவொளிக்
   கற்றேஎன் கற்பகமே
விண்ணவர்கள் ஏத்துகின்ற
   விலகாத துணையேயுனை
எண்ணியெண்ணி இரவுபகல்
   அஞ்சலி செய்யுமிந்தத் 
தொண்டனைக் காத்தருள்வாய்
   திருவரங்கப் பெருமாளே


ஆதியும் நடுவுமாகி 
   அந்தமும் நீயாகிப்போனாய்
தீதொழித்து தர்மம்காக்க 
   தசாவ தாரமெடுத்தாய்
ஞானமே தவமேயுன்னை   
   நித்தமும் வணங்குமிந்த சேயனைக் காத்திடுவாய்
  ஸ்ரீரங்கப் பெருமாளே


ஆண்டாளும் தான்மணந்த
   அளவிலா திருவருளே
ஆழ்வார்கள் துதித்திட்ட
   தெவிட்டாத தெள்ளமுதே
தூண்டுவா ரில்லாத
   தனிப்பெரும் ஜோதியே
ஆண்டையே சரண்நீயே
   அரங்கத்துப் பெருமாளே







No comments:

Post a Comment