Thursday, May 1, 2014

Shiva - லிங்காஷ்டகம் தமிழில்

அரிஅயன் தேவர்கள் போற்றிடும் லிங்கம்
அழகுடன் ஒளிர்ந்திடும் தூயதோர் லிங்கம்
பிறவியின் துன்பங்கள் போக்கிடும் லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

தேவரும் முனிவரும் தொழுதிடும் லிங்கம்
காமத்தை எரித்திடும் கனிவுள்ள லிங்கம்
இராவணன் ஆணவம் அழித்திட்ட லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

நறுமண திரவியம் பூசிய லிங்கம்
நமக்குநல் அறிவினை நல்கிடும் லிங்கம்
சுராசுர சித்தரும் சேவித்த லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

தங்கமும் மணிகளும் அழகுசெய் லிங்கம்
சர்ப்பங்கள் பின்னியே அழகுறும் லிங்கம்
தக்கனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

சந்தன குங்குமம் பூசிய லிங்கம்
தாமரை மாலைகள் சூடிய லிங்கம்
முந்தைய வினைகளும் நீக்கிடும் லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

பாவமும் பக்தியும் புத்தியில் வைத்து
தேவர்க ளனைவரும் செவிக்கும் லிங்கம்
ஆயிரம் சூரியன் போலொளிர் லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

எட்டிதழ் மலரலங் கரித்திடும் லிங்கம்
சிருட்டியின் காரண மாகிய லிங்கம்
எட்டுவித வறுமை அழித்திடும் லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்

குருபக வானுமே தொழுதிடும் லிங்கம்
நறுமண மலரால் அர்ச்சிக்கும் லிங்கம்
தனைவிட சிறந்ததில் லாததோர் லிங்கம்
பணிவுடன் தொழுவேன் நான்சிவ லிங்கம்






No comments:

Post a Comment