Wednesday, May 21, 2014

Krishna - திருமுகத்தில் மீசையோடு அருச்சுனன் சாரதி

திருமுகத்தில் மீசையோடு அருச்சுனன் சாரதி
திருவருள் புரிவது மிங்கே
முறையிட்ட களிறுக்கு மோட்ச மருளிய
வரதன் குடியிருப்பது  மிங்கே

சிறுவன் சொல்லுக்கு செவிசாய்த்த தெள்ளிய
சிங்கம் இருப்பது மிங்கே
ஒருவனுக்கு ஒருத்தியென உலகிற்குச் சொன்ன
இராம னிருப்பது மிங்கே

அரங்கத்துப் பெருமானும்  வேத வல்லியை
திருமணம் செய்தது மிங்கே
குருராமா னுசனும் மணவாள மாமுனியும்
குடியிருக்கும்  கோவிலு மிதுவே 

வருகின்ற அடியவரின் இம்மை மறுமையின்
வினைதீர்த்து நல்கும் நலமே
திருமங்கை ஆழ்வாரின் திருப்பா சுரம்பாடும்
திருவல்லிக் கேணி தலமே
















No comments:

Post a Comment