Wednesday, May 21, 2014

Krishna - போர்முனையில் கீதை பார்த்தனுக்கா சொன்னாய்?

போர்முனையில் கீதை பார்த்தனுக்கா சொன்னாய்?
பாரெல்லாம் உய்ந்திட பாதை நீ தந்தாய்

நீ கண் திறந்தால்  நெஞ்சங்கள் நிறையும்
தீ பட்ட பனி போல துன்பங்கள் மறையும்

கணக்கிலா செல்வங்கள் கேட்கவில்லை நானும்
பிணக்கிலா இல்லறம்பரிசளித்தால் போதும்

பெற்றவர் வாழ்த்தும் பிள்ளையாக வேண்டும்
உற்றபணி விடைகள் அவர்க்கு செய வேண்டும்

பேர் சொல்ல நல்ல பிள்ளைகள் வேண்டும்
சீரும் சிறப்புமாய் அவர்வாழ வேண்டும்

உடுக்க நல் லுடையும் உணவும் உள் உறையும்
படுத்தால் உறக்கமும் பாங்காக வேண்டும்

நற்றமிழ் பாடல்களில் நான்லயிக்க வேண்டும்
சிற்றின்பம் தன்னை நான்ஜெயிக்க வேண்டும் .

வேதம் காட்டுகின்ற வழிநடக்க வேண்டும்
மாதர்மேல் இச்சையை மனம்கடக்க வேண்டும்

ஞான குணங்கள் நான்பெற வேண்டும்
ஈன மெல்லாம் அழிந்தற வேண்டும்

உள்ள மலங்கள் அழிந்திட வேண்டும்
பிள்ளையர் போலே வெள்ளைமனம் வேண்டும்

ஆண்டவன் உன்மேல் அன்புமிக இருப்பின்

மீண்டும் மீண்டும் பிறவிகள் வேண்டும் 

No comments:

Post a Comment