Wednesday, May 21, 2014

Krishna - உனைத் தேடுதே கண்கள்

உனைத் தேடுதே கண்கள் உனைத் தேடுதே
உனைக்காணாது என்னுடைய  மனம் வாடுதே (2)

உன் குழலோசை சுமந்ததென்றல் எனைத்தீண்டும் போதுஎன்னை அறியாமல் என்னுடைய கண்ணும் மூடுதே

உனைத் தேடுதே கண்கள் உனைத் தேடுதே
உனைக்காணாது என்னுடைய  மனம் வாடுதே

இரும்பான என்னை நீயுன் அன்பாலே தானிளக்கி 
அறியாத பெண்மனதை ஏன் மாற்றினாய்
இத ழோடு இதழ் சேர்த்து இர வெல்லாம் கண் விழிக்க
நதியோரம் வரச்சொல்லி ஏமாற்றினாய்

உனைத் தேடுதே கண்கள் உனைத் தேடுதே
உனைக்காணாது என்னுடைய  மனம் வாடுதே

கரம் பிடித்து காதில் மெள்ள காதல் என்னும் கதை சொல்லி
குழலோசை யில்லென்னைச் சிறைப்படுத்தினாய்
விரிதிட்ட  வலை தன்னில் விழுந்திட்ட என்னையின்று
விலக்கிவைத்து ஏன்கல வரப்படுத்தினாய்

உனைத் தேடுதே கண்கள் உனைத் தேடுதே

உனைக்காணாது என்னுடைய  மனம் வாடுதே

No comments:

Post a Comment