Thursday, May 29, 2014

Ramanuja - ஸ்ரீ எத்திராஜனந் தாதிபாடினால்

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

அமுதனா ரோதிய உடையவர் பெருமைகள்
என்றுமே போற்றிட வேண்டிய உடமைகள்
தமிழெனும் கன்னியின் தலையலங் காரமே
தமிழருக் கிதுவென்றும் ஒருஅகங் காரமே

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

கானகம் சென்று அமர்ந்திட வேண்டாம்
கடுந்தவம் செய்து களைத்திட வேண்டாம்
வீணிலே அலைந்து வியர்த்திட வேண்டாம்
வெந்தழல் நெய்யென உருகிட வேண்டாம்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

(ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்)

நானெனும் அகந்தை நமைவிட்டு நீங்கிடும்
நம்பெருமாள் மேல் நம்பிக்கை ஓங்கிடும்
ஓதிட தினமும் பாவங்கள் குறைந்திடும்
பாற்கடல் பாதை பார்வைக்குத் தெரிந்திடும்

ஓதும் அன்பர்க்கு வேத ஞானங்கள் அருளும் எதிராசன் பாதமே
வேறு குருயாரும் தேட வேண்டாமே போது மிதுமட்டும் போதுமே
சூழும் வினைதீர வாழ வழிகாட்டும்
மோக்ஷ அருள் நெறியே

ஸ்ரீ எத்திராஜனந்  தாதிபாடினால்  மனதில் அமைதி மேவும் அதன்
எதுகை மோனைகள் இயைபு கற்றிட தமிழில் அறிவு கூடும்

Wednesday, May 28, 2014

Baba - சாயியெனும் தெய்வம்

சாயியெனும் தெய்வம் சீரடியில் நமக்கு
காவலென இருக்க கவலைகள் எதுக்கு?

(சாயியெனும் தெய்வம்)

குழந்தைகளை அன்னை காப்பதுபோல் நம்மை
காத்திடுவான் சாயி கணக்குக்கவன் தாயி 

(சாயியெனும் தெய்வம்)


அவனைவிட எளிய இறையொன்றும் இல்லை
தயவினுக்கு அவனே தரணியிலே எல்லை

(சாயியெனும் தெய்வம்)


நாடி வரும் நெஞ்சைத் தேடி வரும் ஜோதி
பாடி வரும் எனக்கும் அவன் தருவான் நீதி

(சாயியெனும் தெய்வம்)


Vishnu - ஞானத்தில் ஒளியினிலே

வழிகாட்டும் குருசொன்ன வழியில்நீரும் செல்கிலீர்
விதியிட்டுப் போகும்போக்கில் வீணிலே செல்லுவீர்
விழலுக்கிறைத்த நீராக வாழ்கை ஆகவேணுமோ?
வாசுதேவன் அடிபணிய விதியும்நமைச் சேருமோ?

Tuesday, May 27, 2014

Baba - சாயி நாமம் என்னும் அமிர்தம்

சாயி நாமம் என்னும் அமிர்தம் அருந்த
வாருங்கள் எனது தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

பொருளின் மாயையில் எத்தனை நாட்கள்
புரியாதவராய் இருப்பீர்கள்?
மரணம் வந்திடும் வேளையில் அதுவும்
வந்திடும் என்றா நினைத்தீர்கள்?
உங்களின் இந்த தேடல்லில் எல்லாம்
ஒருபயன் இல்லை தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

(சாயி நாமம் என்னும் அமிர்தம்)

மதத்தின் பெயரால் போராட்டங்கள்
எத்தனை நாள்தான் செய்வீர்கள்?
இதம்தரும் பாதை சாயியின் பாதை
அதில்பய ணிப்போம் வாருங்கள்

உங்கள் மதமெது வாயினும் நீங்கள்
இவனை நம்புங்கள் தோழர்களே
சங்கடம் தீர்த்து சுகம் தரவல்லது
சாயி பாதைதான் தோழர்களே

(சாயி நாமம் என்னும் அமிர்தம்)

Baba - साईं नाम का अमृत पीने चले आईये दोस्तों

साईं नाम का अमृत पीने चले आईये दोस्तों
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

दौलत के माया में डूबकर कब तक ऐसे रहिएगा
दुनिया छोड़कर जाते वकत क्या वह साथ में आयेगा
बे मतलब के हरकतें छोड़ दो दोस्ती का वास्ता
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

(साईं नाम का अमृत पीने )

मज़हब के आप नाम को लेकर ऐसा कब तक लडियेगा?
साई ने ऐसा मार्ग दिखाया उस पर क्यों न चलियेगा?
चाहे जिस मज़हब का हो तुम, कर लो इस पर आस्था
संकट से हमें मुक्त कराये साईं नाम का रास्ता

(साईं नाम का अमृत पीने )

Sunday, May 25, 2014

Baba - साई के चरणों में जो दिल आ गए

साई के चरणों में जो दिल आ गए
साई के चरणों में जो दिल आ गए
समझो उनके अब सुखद दिन आ गए
साई के चरणों में जो दिल आ गए

आये दिन अब ज़िन्दगी में जंग नहीं
आये दिन अब ज़िन्दगी में जंग नहीं
साईं के परिवार में हम मिल गए
साईं के परिवार में हम मिल गए
(समझो उनके )

साईं जैसा कौन मिलेगा मेरे जैसों को?
साईं जैसा कौन मिलेगा मेरे जैसों को?
वह मिले तो सारी दुनिया मिल गयी
वह मिले तो सारी दुनिया मिल गयी
(समझो उनके )

बीते जनम के कर्म से हम को मिले
बीते जनम के कर्म से हम को मिले
अब न उनका साथ छोड़ेंगे कभी
अब न उनका साथ छोड़ेंगे कभी
(समझो उनके )

Set to the tune of Dil ke armaan aansoon mein beh gaye 

Vishnu - ஞானத்தில் ஒளியினிலே

எனது எனதில்லாதது எல்லாமே இருதினங்களுக்கு
கனமில்லை நீர்மேல்பூத்த தாமரை மனங்களுக்கு

பழந்தின்ன குரங்குண்டு பணந்தின்ன உறவுண்டு
நிழல்கூட இரவினிலே நம்முடன் வருவதில்லை

உன்னிதழில் சிரிப்பிருந்தால் எல்லாரும் உறவுகள் தான் .
கண்ணீருக்குப் புகலிடம் கண்கள்கூட தருவதில்லை.

உலையேற்றிய பாத்திரத்தில் ஊற்றிவைத்த குளிர்ந்த நீர்
கரைந்து தான் போனதோ காற்று தான் ஆனதோ
அலைபாயும் நெஞ்சத்தை இறையிலேற்றி வைத்ததும்
அடங்கித்தான் போனதோ அமிழ்ந்து தான் போனதோ

எட்டெழுத்து மந்திரமே இறுதியென்று ணர்ந்தபின்
எட்டெழுத்து மந்திரமே உறுதியென்று ணர்ந்தபின்
எட்டெழுத்து மந்திரத்தைப் பற்றிநீயும் நின்றிட
எட்டெழுத்து மந்திரமும் சுற்றியுனை நிற்குமே

எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது
எட்டின்துணை கொண்டுவிட கிட்டமாகத் தெரியுது
எட்டியிருந்து பார்க்கையில் ஒருதொலைவு தெரியுது
எட்டியுள்ளே பார்க்கையில் கிட்டமாகத் தெரியுது

குற்றமுள்ள பிறவியைக் கொண்டாடும் மாந்தரே
எட்டெழுத்து மகிமையை எங்கனம்நீர் மறந்ததோ?
குற்றமுள்ள பிறவியைக் கடந்துகாண வாருமேன்
எட்டெழுத்து மகிமைநீர் உணர்ந்தோத வாருமேன்

எட்டெழுத்துக் குள்ளனைத்து ஆதியந்தம் அடங்கிடும்
முட்டவரும் மாடுகளும் மூச்சடைத்து ஒடுங்கிடும்
கெட்டியிருள் விலகியங்கு கதிரொளியும் துலங்கிடும்
சிற்றறிவும் விரிந்தெல்லாம் சட்டென்று விளங்கிடும்


Friday, May 23, 2014

General - ஏன் அழுதான்?

இலைகளினூடே சில்லறையாய்
இறைந்திருந்த வெய்யில்.
மரத்தின் நிழல்
மனதுக்கும் உடலுக்கும் இதம்.

காலையில் சாப்பிடாத வயிறு
கண்களைத் தாலாட்ட
வந்த கனவிலும் பசி.

ஏதோ ஒரு கை
(பார்த்தேயிராத அம்மாவுடையதோ?)
ஒரு கவளம் சோறு
ஊட்ட யத்தனித்தபோது
உதை விழுந்தது.

வலியில் துடித்து விழித்தன கண்கள்.

"மாட்டுக்குத் தண்ணி வக்காம
தூக்கம் என்னலே சவமே? த்தூ..."

மேலே வழிந்த எச்சிலில்
பன்னீர் புகையிலை வாசம்.

அழுக்குச் சட்டையால்
அவமானத்தைத் துடைத்துக் கொண்டு
மாட்டுக்குத் தண்ணி வைக்கையில்
அது சிரித்த மாதிரி இருந்தது.

திரும்ப யத்தனித்தக் கால்கள்
தனிமையை உணர்ந்து
தான் வாங்கிய உதையை
மாட்டுக்குத் தானம் செய்தது.

"சிரிப்பால சிரிச்ச?"

மாடு அழுதது.
எதற்கென்று தெரியாமல்
அவனும் அழுதான்.

Thursday, May 22, 2014

Baba - தீபம் எரியுது ஜோதி தெரியுது

தீபம் எரியுது ஜோதி தெரியுது
சாயியின் உருவமும் தெரிகிறது .
பாபம் களையும் நாத வடிவாம்
பாபா இருப்பதும் புரிகிறது

உன்பெயர் சொல்லி இனித்திடவே என்
இதழ்களும் இங்கே துடிக்கிறது
கண்ணீர்த் துளியால் கால்களைக் கழுவ
கண்களும் ஆசைப் படுகிறது

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

உன்னை நினைத்து உருகிய உள்ளம்
போதும் போதும் என்கிறது
அன்னையின் செவியில் எந்தன் குரலும்
விழவில்லை யாவெனக் கேட்கிறது

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

இதுவரை நானும் எனக்கென உன்னை
எதுவும் கேட்டது இல்லையடா
விதிமுடிந்தால் அது சீரடியில் எனும்
வரமொன்றை நீ தந்திடடா

(தீபம் எரியுது ஜோதி தெரியுது )

Wednesday, May 21, 2014

Vishnu - அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்


அரங்கனின் நாமம் மோக்ஷ பிரதானம்
அதனை தினமும் செபித்திடுவோம்
இருவடிகளை நம் இதயத்தில் வைத்து
அனுதினமும் நாம் துதித்திடுவோம்

(அரங்கனின் நாமம்)

வீணில் தருக்கம் வாதங்கள் என்ற
வாழ்வை நாமும் மாற்றிடுவோம்
தூணைப்பிளந்து சிறுவனைக் காத்த
தேவனை நாம் போற்றிடுவோம்
தானேயான திருமேனியனின்
துணையை நாமும் கொண்டிடுவோம்
ஞானகுருவின் நிர்மல ரூபத்தை
நெஞ்சினிலே நாம் கண்டிடுவோம்

(அரங்கனின் நாமம்)

கண்கள் காணும் காட்சியில் எல்லாம்
கண்ணனை நாமும் கண்டிடுவோம்
எண்ணம் முழுவதும் அவனை நிறைத்து
அன்பு வழியில் சென்றிடுவோம்
மண்ணை விண்ணை அவன் அளந்தானே
மனதை அளப்பது காரியமா
திண்ணம் திண்ணம் அவனருள் இருந்தால்
தொடரும் பயணம் தைரியமாய்

(அரங்கனின் நாமம்)
x

Ramanuja - பெரும் புத்தூர் மன்னவா

 பெரும் புத்தூர் மன்னவா உன் 
பெருமைநான் சொல்லவா 
தானே உகந்த திரு மேனி 
கொண்டே இங்கு அருளே நீ 

பிறந்தாய் அமர்ந்தாய் மனதைக் கவர்ந்த

பெரும் புத்தூர் மன்னவா உன்
பெருமைநான் சொல்லவா 

நாவுரைக்க எந்தன் மனமுரைக்க 
நெகிழ்ந்து நெகிழ்ந்து அது தினமுரைக்க 
நோய்கள் மறைந்து உடல் சிலிர்த்திருக்கும் உனை 
நாடும் உயிர்கள் என்றும் சிரித்திருக்கும் 
வாழ்வின் இலக்குன் மலரடி தானே 

பெரும் புத்தூர் மன்னவா உன் 
பெருமைநான் சொல்லவா VRI

Vishnu - திருமாலின் சுபதரிசனம்

கையிலே சுதர்சனம் கண்டுதுள் ளுதுமனம்
திருமாலின் சுபதரிசனம்
மெய்யுருக மனதிலே மண்டிய இருளகல
பெருமாளின் சுபதரிசனம்
மெய்ஞான சோதியன் பாதங்கள் சேவிக்கும்
மகாலட்சுமி சுபதரிசனம்
பைந்நாகப் பாயான வைணவத்தின் தாயான
எதிராசன் சுபதரிசனம்

General - தாகமென்று வந்தவர்க்குத் தண்ணீரைத் தந்திடாது

தாகமென்று வந்தவர்க்குத் தண்ணீரைத் தந்திடாது
ஆகமங்கள் படித்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

சறுக்கி விழுந்தவர்களை தூக்கிநிறுத்த உதவாது
இருவிழிநீர் சிந்தியென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

தந்தைதாய்க்கு சேவைகள் செய்திடாது புறக்கணித்து
எந்தையைநீ நினைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

கருணையோடு கூடவாழும் தீனருக் குதவிடாமல்
ப்ரவசனங்கள் கேட்டுவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

வருத்தும்பசி போக்குமுணவு வழங்கிடாது தானதர்மம்
பெருமைக்காக செய்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

புண்ணியதீர்த் தங்களாடி புறவழுக்கு நீங்கிமாசு
எண்ணத்திலே வைத்துவென்ன புண்ணியம்? நெஞ்சே 
நீயுமிதை நினைத்துப்பாரடா!

தந்தைதாயின் திருவடியில் சொர்கமுண்டு நீயறிவாய்
வந்தனங்கள் செய்துவாழு நெஞ்சமே - நீ

பழியிலிருந்து மீளுகொஞ்சமே

Baba - சீரடி ராஜா பதில் சொல்லு


சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு  

உன்தரி சனம்நான் கண்டிடவே
இருமுறை சீரடி வந்தேனே
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

சீரடி ராஜா பதில் சொல்லு
சீக்கிர மெனக்கு பதில் சொல்லு
ஓடிவந்தேனே உனை நம்பி
உண்மையை எனக்கு நீ சொல்லு 

சின்னஞ் சிறிய வீடென்று
சாயி நீயும் நினைத்தாயோ
தின்ன எதுவும் தரமாட்டேன்
என்றே நீயும் பயந்தாயா
உன்நிலைமைக்கு நான் ஈடு
இல்லை என்று  நினைத்தாயோ
என்வீட்டிற்கு எனைத் தேடி
ஒருமுறையேனும் வந்தாயா

மதியா தாரின் வீட்டிற்கு
எவரும் இங்கே செல்வதில்லை
எதிரியா நானும் தெரியவில்லை
என்வீட்டிற்கேன் வரவில்லை




Shiva - அங்கிங் கெனாது எங்குமே நிறைந்தவன்

சிவாய நமஒம் சிவாய நமஒம்
ஒம் நமச் சிவாய ஒம்
ஒம் நமச் சிவாய ஒம் நமச் சிவாய
ஒம் நமச் சிவாய ஒம்


அங்கிங் கெனாது எங்குமே நிறைந்தவன் 
ஆனந்த ஜோதி யவன்
திங்களைத் தரித்தவன் பங்கயத் தாளிணை
சிரத்தினில் தரித்திடு வோம்

சிவாய நமஒம் சிவாய நமஒம்
ஒம் நமச் சிவாய ஒம்

நம்குலம் தழைக்க நாமங்கள் அழைப்போம்
நினைவினில் ஏற்றிடுவோம்
மங்களம் ருளும் மன்னவன் புகழை
மனதினில் போற்றிடு வோம்

சிவாய நமஒம் சிவாய நமஒம்
ஒம் நமச் சிவாய ஒம்

ஒம் நமச் சிவாய என்னும் மந்திரம்
அனுதினம் ஒதிடுவோம்
நால்வர் பாடிய நற்றமிழ் உணர்ந்து
நாமும் பாடிடுவோம்

சிவாய நமஒம் சிவாய நமஒம்
ஒம் நமச் சிவாய ஒம்

கனக சபைதனில் நாட்டிய மாடும்
கால்களைத் தொட்டிடு வோம்
மனஅக சபையினில் ஆடிடக் கட்டளை
மன்னனுக் கிட்டிடு வோம்

சிவாய நமஒம் சிவாய நமஒம்
ஒம் நமச் சிவாய ஒம்
சிவாய நமஒம் சிவாய நமஒம்

ஒம் நமச் சிவாய ஒம்

Iyappan - சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண

சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை நானணிந்தேன் துளசிமணி மாலை

ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை

கழுத்திலதை போட்டதுமவன் நினைவு வந்தது
கடுமையான விரதம் தாங்கும் துணிவு வந்தது
பழுதில்லாத பக்தி பிரேமை பணிவு வந்தது
பாவிநெஞ்சில் உன்னருளால் கனிவு வந்தது

ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை

சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை நானணிந்தேன் துளசிமணி மாலை


நோயிலாமல் வாழநீயும் அருள் தருவாயே
நாடிஎங்கும் செல்லாமல்  பொருள் தருவாயே
நேயமுடன் உதவிசெயும் மனம் தருவாயே
நின்னழகு தரிசனம்நீ தினம் தருவாயே

ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை

சபரிமலை ஆளுகின்ற சுந்தரனைக் காண
துதித்தவனை நானணிந்தேன் துளசிமணி மாலை

ஐயப்பன் மாலை
அருள்தரும் மாலை


Baba - குடி இருக்கும் இடத்தில் சாயி

குடி இருக்கும் இடத்தில் சாயி
உன் கோவில் வர வேண்டும்
நான் கதவுகளை  திறந்தால்
உன் தரிசனம் பெற வேண்டும்

(குடி இருக்கும் இடத்தில் சாயி)

அடிக்கும் மணியைக் கேட்டு
என் உறக்கம் கலைய வேண்டும்
உன் அழகிய திருமுகத்தில் இரு
விழியும்  திறக்க வேண்டும்

(குடி இருக்கும் இடத்தில் சாயி)

தினம் வந்து போகையில் நான்
உன் திருவடி தொழ வேண்டும்
தயை பெருகும் உன் விழியில்
நான் அடிக்கடி விழ வேண்டும்

நினைத்து நினைத்து உன்னை என்
நெஞ்சும் உருக வேண்டும் அந்த
நினைப்பில் இரண்டு கண்ணும்
கண்ணீரில் நனைய வேண்டும்

(குடி இருக்கும் இடத்தில் சாயி)

அருகருகே குடியிருந்தால் என்
வீட்டுக்கு வர வேண்டும்
இருவருக்கும் இடையிலே ஓர்
நட்பு  மலர வேண்டும்

தினம் வந்து போகையில் நான்
உன் திருவடி தொழ வேண்டும்
தயை பெருகும் உன் விழியில்
நான் அடிக்கடி விழ வேண்டும்


(குடி இருக்கும் இடத்தில் சாயி)