Wednesday, May 21, 2014

Baba - பாபா பதினொன்று



கதியில்லையென வந்தவருக்கு
பதினொரு வாக்குகள் தந்தானே
கலியுக வரதனும் அவன்தானே

விதியைமாற்றும் வல்லமையை
வணங்கியவருக்குத்  தந்தானே 
கலியுக வரதனும் அவன்தானே

சீரடி மண்ணை மிதித்தவருக்கு
மாறிடும் துன்பங்கள்  நிச்சயமே
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

துன்பம் மறைந்து இன்பம் பெருகும்
என்கோவில் படி ஏறிய வர்க்கு
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

நீத்தும் எனது நிலவுடலை நான்
காத்து நிற்பேன் என் அடியவரை
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

வேண்டிய வரங்கள் தந்திடுவேனே 
பூண்டால் அன்பு என்னிடமே
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

அழிவில்லாத ஒருபொருள் நானே
விழிப்புடன் உன்னை காத்திருப்பேனே
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே



வெறுங்கை யுடனே என்னிடம் வந்தவர்
திரும்பிய தாயொரு சரித்திர மில்லை
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

தேவைகளுக்காக தாள் பணிந்தவர்க்கு
ஜீவிதமாய் நான் என்று மிருப்பேன்
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

என்னை நம்பி என்னி டத்திலே
தன்னை தந்தவன் என் பொறுப்பாவான்
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

பளுவை எந்தன் பேரில் சுமத்திட
சுளுவாகும் உன் வாழ்க்கைப் பயணம்
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

உதவிகள் என்று வரு மடியவர்கு
உடனே உதவிகள் செய்வேனே நான்
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே

என்னை வணங்கும் அடியவர் வீட்டில்
என்றும் வறுமை அண்டி விடாது
சொன்னது சீரடி நித்தியனே
சொன்னது என்றும் சத்தியமே


No comments:

Post a Comment