Saturday, May 3, 2014

Baba - சாயி தீபம்

இருளிலே வடிவொன்று கண்டேன் என்
இன்னலுக் கதுதான் முடிவென்று கொண்டேன்
சிரம்முதல் பதம்வரையில் ஒளிர்ந்தார் அவர்
சீரடியின் சாயி ராமென்று கண்டேன்

யாமிருக்கப் பயமில்லை என்றார் - அவர்
ஓமென்னும் பிரணவ வடிவாக நின்றார்
ஆமென்னும் சொல்லன்றி ஒன்று - அவர்
வேறுசொல் அறியாத பரமாக நின்றார்

சந்ததம்நம் நினைவாக நிற்பார் - அவர்
சிந்தையில் குடிகொண்டு நம்மோ திருப்பார்
சொந்தமாய் பந்தமாய் இருப்பார் - அவர்
விந்தையாய் நம்முடைய வினைகளைந்து காப்பார்

No comments:

Post a Comment