Wednesday, May 21, 2014

Ramanuja - உன்னைத் தொழுதேன் உன்னடி பணிந்தேன் குருவடிவே

உன்னைத் தொழுதேன் உன்னடி பணிந்தேன் குருவடிவே
உன்வழி  நான் நடந்தேன்   
உன்னிடம் சரணடைந் தேன்
குருவே என்னைக் காத்தருளு

பவநதியைத் தாட்டிவிடும் பரமனையும் காட்டிதரும்
குருவடியே அருள்வடிவே
திருவடியே மறைமுடிவே
நீ நினைத்தால் அருளும் கூடும் அதில் வினைகள்
கரைந்து போகும்

உன் அடியே என் தஞ்சம்
புகழைப் பாடும் என் நெஞ்சம்

உன்னைத் தொழுதேன் உன்னடி பணிந்தேன் குருவடிவே
உன்வழி  நான் நடந்தேன்   
உன்னிடம் சரணடைந் தேன்
குருவே என்னைக் காத்தருளு

பொருளொன்றும் வேண்டாமே அருளொன்று அதுபோதும்
தமிழறிவை தந்துவிடு
என்நாவில் வந்துவிடு
உன் பெயரை தினமும் பாடும் அருள் இருந்தால்
இன்பம் மோதும்

உன் அடியே என் தஞ்சம்
புகழைப் பாடும் என் நெஞ்சம்

உன்னைத் தொழுதேன் உன்னடி பணிந்தேன் குருவடிவே
உன்வழி  நான் நடந்தேன்   
உன்னிடம் சரணடைந் தேன்
குருவே என்னைக் காத்தருளு


No comments:

Post a Comment