Wednesday, May 21, 2014

Krishna - காளிங்க நர்த்தனம்


யம்யம்யம் யக்ஷரூபம் தஷதிஷி விதிதம்
பூமிகம் பாயமானம்
கமலமலர் பதங்களை காளிங்கன் சிரமிருத்தி
கண்ணனிங் காடுகின்றான்
கோகுலம் வாழ்கின்ற கோபரைக் காத்திட
கண்ணனிங் காடுகின்றான்

அச்சுதம் கேசவம் ஸ்ரீதரம் மாதவம்
ஸ்ரீகிருஷ்ண தாமோதரம்
இச்சையகன் றிடவென் தலைமீது கால்வைத்து
ஆடிடு நீயொரு தரம்

ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
ஜய ஜய வாசுதேவா
ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
காத்திட ஓடி வா வா

தமருய்ய பாம்பின்மேல் ததிங்கிணததோ மென்று
தூயவன் ஆடுகின்றான்
திருக்கரத்தில் வால்பிடித்து தலைமீது கால்வைத்து
துள்ளியே ஆடுகின்றான்

ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
ஜய ஜய வாசுதேவா
ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
காத்திட ஓடி வா வா

யமுனையிவன் பதம்கழுவ இரவிலே இன்பமாய்
யதுகிரிய ஆடுகின்றான்
திருமுடியி லிறகாட செவ்விதழில் சிரிப்போட
திருமாலு மாடுகின்றான்

ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
ஜய ஜய வாசுதேவா
ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
காத்திட ஓடி வா வா

இமைமூட மறந்தபடி அனைவரும் பார்த்திருக்க
அச்சுதன் ஆடுகின்றான்
இதுவரை காணாத அதிசய நடனத்தை
இன்றவன் ஆடுகின்றான்

ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
ஜய ஜய வாசுதேவா
ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண ஜய ஜய ஸ்ரீகிருஷ்ண
காத்திட ஓடி வா வா



No comments:

Post a Comment