Wednesday, May 7, 2014

Mahaperiyavar - காஞ்சி முனிவர் பஞ்சரத்னம்

ஜயஞ்ஜயம் ஜயமே ஜயஞ்ஜயம் ஜயமே ஜயம்தான் இனி ஜயமே 
துயரங்கள் நீக்கிட திருவடி உனதுண்டு இனியிலை ஒரு பயமே
அயர்ந்திடும் வேளை உன்திரு நாமம் உரைப்பேன் இனி தினமே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திர சேகர மாமுனியே

மறைகளைக் காத்தல் தவமெனக் கொண்ட மாசில் சோதியனே
குறைகளைக் கேட்டுக் களைவதில் உனக்கு நிகரில்லை ஆதவனே
கரைகள் இல்லாத அன்பின் நதியே காஞ்சியின் வேதியனே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திர சேகர மாமுனியே

உன்னிடம் வந்தவர் தன்னிடர் நீங்கி இன்பத்தில் ஆழ்ந்திடுவார்
இந்நிலம் மீதில் இவர்போல் இல்லை என்றவர் வாழ்ந்திடுவார்
தன்னலம் கருதா தயவின் சிகரமே உனையவர் வாழ்த்திடுவார்
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திர சேகர மாமுனியே

காலடி யாலே பாரதம் அளந்தாய் வேதத்தின் திருவுருவே
வாயு மனது இரண்டு மடக்கிய மௌனத்தின் ஒருவடிவே
காலடி பிறந்தான் கண்டநல் வழியைக் காக்கும் குருவடிவே
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திர சேகர மாமுனியே

பன்விதக் காஞ்சி உண்டென உலகம் அறிந்தது அந்நாளில்
சங்கரக் காஞ்சி என்றொரு காஞ்சியை அறிந்தது இந்நாளில்
எங்களுக்கென்று தந்தையாய் நீயும் இருந்திடு எந்நாளும்

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர சந்திர சேகர மாமுனியே 

No comments:

Post a Comment