Wednesday, May 21, 2014

Iyappan - கருப்பு வேட்டி கட்டிக்கிட்டேன்

கருப்பு  வேட்டி கட்டிக்கிட்டேன் ஐயப்பா – இந்த
கார்த்திகையில் விரதம் வச்சேன் ஐயப்பா
விருப்பு வெறுப்பு எல்லாத்தையும் ஐயப்பா – ஆறு
வாரத்துக்கு வெலக்கி வச்சேன் ஐயப்பா
(சாமீ)
இருமுடிக்குள் பக்தியுடன் ஐயப்பா – என்
இதயத்த நான் கட்டி வச்சேன் ஐயப்பா
சிறகடிச்சு பறக்குதடா ஐயப்பா – உன்ன
சபரியிலே பார்க்கும் ஆசை ஐயப்பா
(சாமீ)
எரிமேலி சாஸ்தாவே ஐயப்பா – இங்கு
உன்ன விட்டா எனக்கு யாரு ஐயப்பா
குறிப்பறிந்து குறை தீர்க்கும் ஐயப்பா – என்
கைபிடிச்சு வழியக்காட்டு ஐயப்பா
(சாமீ)
கருப்பு  வேட்டி கட்டிக்கிட்டேன் ஐயப்பா – இந்த
கார்த்திகையில் விரதம் வச்சேன் ஐயப்பா


No comments:

Post a Comment